உள்ளூர் செய்திகள்

கரூர் செய்தி:மதுரை வீரன் கோவில் திருவிழா

Published On 2023-07-28 12:39 IST   |   Update On 2023-07-28 12:39:00 IST
  • கரூர் மாவட்டம்புன்னம் சத்திரம் சடையம் பாளையம் மதுரை வீரன் கோவில் திருவிழா
  • 5ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடைபெறுவது வழக்கம்

கரூர்

கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே புன்னம் ஊராட்சியில் சடையம்பாளையம் காலனிதெருவில் மதுரைவீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள், கருப்பண்ணசாமி, ஆகிய தெய்வங்களுக்கு முக்கிய விரத நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபாடு நடைபெற்று வருகிறது.

இங்கு 5ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடைபெறுவது வழக்கமாகும் இந்த திருவிழாவையொட்டி உள்ளூர், வெளியூர் பக்தர்கள் கோவிலை வந்தடைதல் பிறகு திருவிழாவிற்காக மதுரைவீரன், கன்னிமார் தெய்வங்களுக்கு காப்புகட்டுதல் நிகழ்ச்சி கடந்த 14-ந் தேதி தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தினசரி அபிஷேக பூஜைகள் நடைபெற்று வந்தன.

காவிரி ஆற்றுக்கு சென்று புனித தீர்த்தம் எடுத்து கொண்டு ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

பொங்கல் வைத்து படையலிட்டு வழிபாடும் இதன்பின் கிடாவெட்டும், மதுரைவீரனுக்கு சிறப்புபூஜை, ஆராதனைகள் செய்யப்பட்டு சுவாமி தரிசனம் செய்யப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News