உள்ளூர் செய்திகள்

மாநில அளவிலான சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

Published On 2023-01-26 13:21 IST   |   Update On 2023-01-26 13:21:00 IST
  • மாநில அளவிலான சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது
  • போட்டியில் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி பூவிதா மாநில அளவில் நான்காம் இடம் பெற்று கோப்பையும், பாராட்டுச் சான்றிதழும் பெற்றார்

கரூர்:

கரூரில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. போட்டியில் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி பூவிதா மாநில அளவில் நான்காம் இடம் பெற்று கோப்பையும், பாராட்டுச் சான்றிதழும் பெற்றார். மாணவி தனனி 15வது இடம் பெற்றார். மேலும், ஹேமஸ்ரீ, திகழ், அஸ்வந்த், பத்ரிநாத், சர்வேஸ் ஆகியோர் தகுதி சான்று பெற்றனர்.

தொடர்ந்து, பள்ளியில் பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா நடந்தது. இதில், மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளித்த ஓய்வுபெற்ற ஆசிரியர் வீரமலை, பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்கள் மற்றும் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியரை பாராட்டினர். விழாவில் தலைமை ஆசிரியர் சாகுல் அமீது உட்பட பலர் பங்கேற்றனர்.


Tags:    

Similar News