உள்ளூர் செய்திகள்

கரூர் வள்ளுவர் கல்லூரி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு

Published On 2023-06-28 07:41 GMT   |   Update On 2023-06-28 07:41 GMT
  • கரூர் வள்ளுவர் கல்லூரி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கபட்டுள்ளது
  • மாணவர்கள் சென்ற வாரம் 23-ந்தேதி பணியில் சேர்ந்தனர்.

கரூர்,

இந்திய தொழில் நுட்பக் கழகம் (மெட்ராஸ்) தென்னிந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியாகும். இந்திய அரசினால் தேசிய இன்றியமையாக் கழகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்தியாவின் தலைசிறந்த கல்விக்கூடங்களில் ஒன்றாகும். இதன் துணை நிறுவனமான ப்ரவர்தக் டெக்நாலோஜிஸ் திறமையான வள்ளுவர் கல்லூரி மாணவர்களை ஒவ்வொரு வருடமும் பணியமர்த்தி வருகிறது. இந்தவருடமும் கணினி அறிவியல் பயின்று முடித்த மூன்று மாணவர்களை தேர்வு செய்துள்ளது. இந்த மாணவர்கள் சென்ற வாரம் 23-ந்தேதி பணியில் சேர்ந்தனர். வேறெந்த கல்லூரிக்கும் கிடைக்காத வாய்ப்பும் பெருமையும் வள்ளுவர் கல்லூரிக்கு கிடைத்திருப்பதாக கல்லூரியின் தலைவர் செங்குட்டுவன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இதற்F மாணவர்களின் திறமை மற்றும் கல்லூரியில் அளிக்கப்படும் தலைசிறந்த பயிற்சியுமே காரணம் என்றும் அவர் கூறினார்.

Tags:    

Similar News