அரசு கல்வி நிறுவனங்களில் சுதந்திர தின விழா
- கரூர் அரசு கல்வி நிறுவனங்கள் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது
- பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே பண்டுதக்காரன் புதூர் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு கல்வி நிறுவனங்கள் சார்பில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. சுதந்திர தின விழாவிற்கு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் துணைக் குழு உறுப்பினரும், அரசு கல்வி நிறுவனங்களின் தலைவருமான நடேசன் தலைமை வகித்து தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அரசு கல்வி நிறுவனங்களின் தாளாளர் கோதை நடேசன் முன்னிலை வைத்தார். விழாவில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.மேலும் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதுகலைத் தமிழ் துறை அறம் தமிழ் மன்றத்தால் சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாறுவேடப் போட்டி, பேச்சுப்போட்டி, நீயா? நானா?, பட்டிமன்றம் ஆகியவை நடத்தப்பட்டன. இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அரசு கல்வி நிறுவனங்களின் செயலாளர் இன்ஜினீயர் கண்ணன், கலந்து கொண்டு பாராட்டி பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கினார். அதைத் தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக விளையாட்டு மற்றும் உடற்கல்வியியல் துறை சார்பில் பிரமிடு ,மௌன நாடகம் ,சிலம்பம், சிறப்பு அணிவகுப்பு ஆகியவை நிகழ்த்தப்பட்டன. இவ்விழாவில் நிகழ்ச்சியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துணை முதல்வர் ரதிதேவி, அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் ஈனோக் ஜெபசிங் பெட்போர்ட் ,
உடற்கல்வியியல் துறைத் தலைவர் குணா, இயக்குநர் அருள், பேராசிரியர் கௌசல்யா, தமிழ்த் துறை தலைவர் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர்கள் விழாவை ஒருங்கிணைப்பு செய்தனர். மேலும் அனைத்துத் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், ஆசிரியரல்லாப் பணியாளர்கள் மாணவிகள் ஆகியோர்கள் பங்குபெற்று நிகழ்வை சிறப்பித்தனர்.