உள்ளூர் செய்திகள்

வீடு இடிந்து வாகனங்கள், பொருட்கள் நாசம்

Published On 2023-10-15 12:52 IST   |   Update On 2023-10-15 12:52:00 IST
  • விடிய விடிய பெய்த கனமழையால் வீடு இடிந்து வாகனங்கள், பொருட்கள் நாசமானது
  • தொழிலாளி குடும்பத்தினர் உயிர் தப்பினர்

வேலாயுதம் பாளையம்,

கரூர் மாவட்டம் புகளூர் வட்டம் நொய்யல் அருகே வேட்டமங்கலத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி. இவரது மகன் கலைச்செல்வன் . இவர்கள் அந்த பகுதியில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார்கள்.இவர் குடியிருந்து வரும் வீடு சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு முழுவதும் தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக நள்ளிரவு சுமார் 3 மணியளவில் திடீரென வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அப்போது குமாரசாமி அவரது மகன் கலைச்செல்வன் மற்றும் குடும்பத்தினர் அருகில் இருந்த வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் சுவர் இடிந்து விழுவதை சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்தபோது அந்த வீட்டிற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் பைக் மீதும் சுவர் விழுந்து இருந்தது .அதிர்ஷ்டவசமாக குமாரசாமியின் குடும்பத்தினர் அந்த வீட்டிற்குள் படுத்து தூங்காமல் பக்கத்து வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்ததால் உயிர்த்தப்பினார்கள். வீட்டு சுவர் திடீரென இடிந்து விழுந்ததால் வீட்டில் இருந்த பீரோ, கட்டில், டிவி, உணவு பொருட்கள், துணிமணிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் நாசமாயின . இது குறித்து புகளூர் தாசில்தார் முருகன், வேட்டமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் முருகேசனுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த புகளூர் தாசில்தார் முருகன்,கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் மற்றும் வருவாய்த்துறையினர்,வேட்டமங்கலம் ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து பார்வையிட்டு உடனடியாக ஜே.சி.பி. இயந்திரம் வரவழைக்கப்பட்டு இடிந்து விழுந்த சுவர்களை அகற்றினார்கள்.பின்னர் பாதிக்கப்பட்ட வர்களுக்கு ஆறுதல் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News