உள்ளூர் செய்திகள்
கரூர் நகரப் பகுதிகளில் 2 மணி நேரம் பலத்த மழை
- கரூர் நகரப் பகுதிகளில் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது
- குடியிருப்புகளிலும் மழை நீர் புகுந்தது.
கரூர்:
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கரூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக விட்டுவிட்டு லேசான அளவில் மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் மதியம் வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் நேற்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள வெங்கமேடு, தாந்தோணிமலை, சுங்ககேட், கரூர் ஜவகர் பஜார் உட்பட பல்வேறு பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் கழிவு நீருடன் மழை நீரும் சேர்ந்து வடிகால்களில் சென்றதோடு ஒரு சில பகுதிகளில் குடியிருப்புகளிலும் புகுந்தது.