உள்ளூர் செய்திகள்

கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் ஜப்பானிய மொழி குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி

Published On 2023-07-07 08:13 GMT   |   Update On 2023-07-07 08:13 GMT
  • கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் ஜப்பானிய மொழி குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது
  • ஜப்பானிய மொழியைக் கற்றுக்கொள்வதால் ஏற்படும் நன்மைகளை, சென்னை, ஜப்பான் தூதரகத்தின் ஆராய்ச்சி ஆலோசகர் தெராகா மாமி விவரித்தார்.

கரூர்,

கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் ஜப்பானிய மொழி குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. சென்னை ஜப்பான் தூதரகத்தின் தூதர் தாஹா மசாயுகி தலைமை உரை ஆற்றினார். அவர் தனது உரையில், இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் உள்ள கலாச்சார பாரம்பரிய ஒற்றுமையையும், ஜப்பானிய நிறுவனங்கள் பல்வேறு துறைகளில் திறமையான இந்திய நிபுணர்களை எதிர்பார்க்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஜப்பான் சார்ந்த 600 நிறுவனங்கள் இருப்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜப்பானிய மொழியைக் கற்றுக்கொள்வதால் ஏற்படும் நன்மைகளை, சென்னை, ஜப்பான் தூதரகத்தின் ஆராய்ச்சி ஆலோசகர் தெராகா மாமி விவரித்தார். எம்.கே.சி.இ'ல், ஜப்பானிய மொழித் திறன் தேர்வில் தேர்ச்சி பெற்ற 400 மாணவர்கள் உள்ளனர், மேலும் சுமார் 100 முன்னாள் மாணவர்கள் தற்போது ஜப்பானில் பணிபுரிகின்றனர், மேலும் 300 மாணவர்கள் ஜெஎல்பிடி சான்றிதழின் காரணமாக இந்திய நிறுவனத்தில் வேலை பெற்றுள்ளனர் என்று அசோக் சங்கர், இயக்குனர், எஸ்எஸ்ஜெஎல்டிசி தெரிவித்தார்.

தலைமை உரை செயலாளர் முனைவர் ராமகிருஷ்ணன் வழங்கினார். முனைவர் குப்புசாமி, நிர்வாக இயக்குனர் மற்றும் முனைவர் முருகன், முதல்வர் வாழ்த்துரை வழங்கினார்கள். கலந்துரையாடல் அமர்வில், விசா செயல்முறை, உயர் படிப்பு மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த மாணவர்களின் சந்தேகங்களை பிரதிநிதிகள் தெளிவுபடுத்தினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அயல்மொழி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் குரு பிரசாத், மாணவர் நலத்துறை தலைவர் முனைவர் ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News