உள்ளூர் செய்திகள்

கபடி போட்டியில் அரசு பள்ளி மாணவிகள் சாதனை

Published On 2022-10-29 09:30 GMT   |   Update On 2022-10-29 09:30 GMT
  • கபடி போட்டியில் அரசு பள்ளி மாணவிகள் சாதனை படைத்தனர்
  • மாவட்ட அளவில் நடந்தது

கரூர்:

கரூர் மாவட்ட அளவிலான பெண்கள் கபடி போட்டி கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டிகளை கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி மன்ற தலைவி சேதுமணி மகாலிங்கம் அவர்கள் தொடங்கி வைத்தார்.கிருஷ்ணராயபுரம் வார்டு உறுப்பினர்கள் ராதிகா கதிரேசன், சசிகுமார்,‌ இளங்கோ, சிவகாமி,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மதியழகன் ஆகியோர் போட்டிகளில் பங்கேற்ற மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற 14 வயது உட்பட்ட மாணவிகளுக்கான போட்டியில் முதலிடம் கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியும், இரண்டாம் இடம் எ. உடையாபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியும் , மூன்றாம் இடம் என். புதூர் அரசு உயர்நிலைப்பள்ளியும் பெற்றது.

17 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான போட்டியில் முதலிடம் வாங்கல் எஸ்டி மேரிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியும் , இரண்டாம் இடம் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் , மூன்றாம் இடம் காக்காவடி பி.ஏ.வித்யாபவன் பள்ளியும் பெற்றன.

19 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான போட்டியில் முதலிடம் பஞ்சப்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியும் , இரண்டாம் இடம் கீழவெளியூர் அரசு மேல்நிலைப்பள்ளியும் , மூன்றாம் இடம் வெள்ளியணை பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும்வெ ற்றி பெற்றுள்ளன.

வெற்றி பெற்ற பள்ளி மாணவிகளுக்கு கிருஷ்ணாபுரம் பேரூராட்சி மன்ற தலைவி சேதுமதி மகாலிங்கம் பரிசுகள் வழங்கி பாராட்டி னார். போட்டிக்கான ஏற்பாடுகளை பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் செந்தில்வேலன் மற்றும் தியாகராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News