உள்ளூர் செய்திகள்

எறிபந்து போட்டிக்கு அரசு மகளிர் பள்ளி தேர்வு

Published On 2023-09-19 12:52 IST   |   Update On 2023-09-19 12:52:00 IST
  • மாநில அளவிலான எறிபந்து போட்டிக்கு அரசு மகளிர் பள்ளி தேர்வு
  • தேர்வு செய்யப்பட்ட மாணவிகளையும், உடற்கல்வி ஆசிரியரையும், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் வெகுவாக பாராட்டினர்

கரூர்,

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பாக வருவாய் மாவட்ட அளவிலான எறிபந்து போட்டிகள் கடந்த செப்டம்பர் 13ம்தேதி அன்று நடைபெற்றது. இதில், 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட ஐந்து குறுவட்ட அளவில் அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இந்த போட்டிகளில் கரூர் வாங்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு முதலிடம் பெற்றனர். இந்த பள்ளி மாணவிகள் மாநில அளவிலான எறிபந்து போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள னர். தேர்வு செய்யப்பட்ட மாணவிகளையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியரையும் பள்ளி தலைமை யாசிரியர் ஷண்முகவடிவு உட்பட அனைத்து ஆசிரி யர்களும், பள்ளி பணியாளர்களும், சக மாணவி குறுவட்டத்தை சேர்ந்தகளும் பாராட்டினர்.

Tags:    

Similar News