உள்ளூர் செய்திகள்

கரூரில் கறவை மாடு வளர்ப்பு இலவச பயிற்சி

Published On 2023-04-27 06:41 GMT   |   Update On 2023-04-27 06:41 GMT
  • கறவை மாடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
  • இதில் பங்கேற்க விரும்புவோர், நாளை காலை 10:30 மணிக்குள் நேரடியாக வந்து பயிற்சியில் சேரலாம்.

கரூர்:

கரூர் அருகே, கறவை மாடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் நாளை தொடங்குகிறது என, கரூர் அருகே, பண்டுதகாரன்புதுாரில் உள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கரூர், மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதுாரில் உள்ள கால் நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் கறவை மாடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

அறிவியல் ரீதியான கறவை மாடு வளர்ப்பில் பராமரிப்பு முறைகளான இனங்களை தேர்வு செய்தல், பண்ணை வீட்டமைப்பு, கறவை மாடுகளை தாக்கும் நோய்கள், அவற்றை தடுக்கும் வழிமு றைகள், மூலிகை மருத்துவ சிகிச்சை முறைகள், பசுந்தீவன உற்பத்தி, பதப்படுத்துதல் மற்றும் கலப்பு தீவனம் தயாரித்தல் ஆகிய தலைப்புகளில் பல்கலைக்கழக பேராசிரியர்களால் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர், நாளை காலை 10:30 மணிக்குள் நேரடியாக வந்து பயிற்சியில் சேரலாம். என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News