உள்ளூர் செய்திகள்

பூக்கள் விலை 'கிடுகிடு' உயர்வு

Published On 2022-09-09 12:39 IST   |   Update On 2022-09-09 12:39:00 IST
  • பூக்கள் விலை 'கிடுகிடு' என உயர்ந்துள்ளத
  • கரூரில் வரத்து குறைவு

கரூர்:

கரூரில் பூக்கள் வரத்து குறைவு காரணமாக, அதன் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

கரூர் மாவட்டத்தில் நெல், கரும்பு, உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டாலும் அதற்கு அடுத்த படியாக சூரியகாந்தி, நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வித்துக்களும், பூக்களும் சாகுபடி செய்யப்படுகின்றன. மாவட்டத்தில் வாங்கல், மாயனூர், லாலாப்பேட்டைஉள்ளிட்ட காவிரி ஆற்று பகுதிகளில் மல்லிகை சாகுபடி பூ அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. மேற்கண்ட பகுதிகளில் விளையும் பூக்கள், கரூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு அங்கு ஏலம் விடப் படுகிறது. இதில் பூ வியாபாரிகள் பலர் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பூக்களை வாங்கி சென்று விற்பனை செய்து வருகின்றனர். தற்போது பூக்களின் வரத்து குறைவாலும், திருமணம் மற்றும் பல்வேறு விசேஷங்கள் உள்ளதாலும் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. அதன்படி குண்டு மல்லி கிலோ 2,000 ரூபாய்க்கும்,சம்பங்கி 250 ரூபாய்க்கும், அரளி 280 ரூபாய்க்கும், ரோஜா 280 ரூபாய்க்கும், முல்லைப் பூ, 1,500 ரூபாய்க்கும், செவ்வந்திப்பூ 280 கனகாம் பரம், 1,500 ரூபாய்க்கும் விற்பனையானது.

Tags:    

Similar News