உள்ளூர் செய்திகள்

மின்வாரிய ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

Published On 2023-08-19 11:53 IST   |   Update On 2023-08-19 11:53:00 IST
  • க.பரமத்தி அருகே மின்வாரிய ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்
  • தென்னிலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

கரூர்,

க.பரமத்தி ஒன்றியம்மொஞ்சனூர் அருகே தொட்டம்பட்டியை சேர்ந்தவர் மதியழகன் (வயது 58). இவர் ரெட்டிவலசில் வசித்தவாரு, மின்வாரியத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 5 வருடங்களாக தீராத வயிற்று வலியால் மதியழகன் அவதிப்பட்டு வந்தாராம். இதற்காக பல இடங்களில் சிகிச்சை மேற்கொண்டும் நோய் குண மாகவில்லை என கூறப்படுகிறது.இதனால் மனவேதனையில் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மதியழகன், வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்த கொண்டதாக அப்பகுதியினர் கிராம நிர்வாக அலுவலருக்கும், தென்னிலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பேலீசார் அங்கு சென்று, சடலத்தை மீட்டு, கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் சாந்தி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தென்னிலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News