உள்ளூர் செய்திகள்

தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்

Published On 2023-11-04 14:53 IST   |   Update On 2023-11-04 14:53:00 IST
  • வாக்கு சாவடி முகவர்களுக்கு வாக்காளர் சேர்த்தல், நீக்கம் பதிவு செய்ய அதற்கான படிவத்தினை வழங்கினார்.
  • நவம்பர் மாதம் வருகிற 4 ,5 மற்றும் 18 ,19 ஆகிய தேதிகளில் புதிய வாக்காளர்களை சேர்த்தல் சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற இருக்கிறது

குளித்தலை 

கரூர் மாவட்டம், குளித்தலை மேற்கு ஒன்றிய தி.மு.க. வாக்குச்சாவடி முகவர் கூட்டம் ராஜேந்திரம் தனியார் மகாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் தலைமை தாங்கி வாக்கு சாவடி முகவர்களுக்கு வாக்காளர் சேர்த்தல், நீக்கம் பதிவு செய்ய அதற்கான படிவத்தினை வழங்கினார்.

மாவட்ட அமைத்தலைவர் ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேன்மொழி தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், மேற்கு ஒன்றிய செயலாளர் பொய்யாமணி தியாகராஜன் அனைவரையும் வரவேற்றார்,

கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தால் நவம்பர் மாதம் வருகிற 4 ,5 மற்றும் 18 ,19 ஆகிய தேதிகளில் புதிய வாக்காளர்களை சேர்த்தல் சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற இருக்கிறது, பொய்யாமணி, இனுங்கூர், குமாரமங்கலம், வதியம், கே. பேட்டை ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு சென்று அன்று நடைபெறும் வாக்காளர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாமில் முனைப்போடு செயல்பட்டு புதிய வாக்காளர்களை அதிக அளவில் சேர்க்க பாடுபட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதில் ஒன்றிய கவுன்சிலர் சந்திரமோகன், ஒன்றிய அவை தலைவர் செழியன், பொருளாளர் ரங்கநாதன், மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் ஜெகநாதன், பாஸ்கர், இளம் கதிர் மற்றும் தகவல் தொழில்நுட்பாடிய உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பிரதிநிதி லோகநாதன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News