உள்ளூர் செய்திகள்

காணிக்கையாக ஒத்த செருப்பு கொண்டு வந்த பக்தர்கள்

Published On 2023-10-02 06:11 GMT   |   Update On 2023-10-02 06:11 GMT
  • தாந்தோணி வெங்கட்ரமண பெருமாளுக்கு காணிக்கையாக ஒத்த செருப்பு கொண்டு வந்த பக்தர்கள்
  • கரூர் மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய ஊர்களில் ஒத்த செருப்புடன் ஊர்வலமாக பக்தர்கள் கடைசி சனிக்கிழமை வரை வலம் வருவர்

கரூர்,

திண்டுக்கல் மாவட்டம், கருங்கல் பகுதியை சேர்ந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர். ஒத்த செருப்பு என்னும் செம்மாளி செய்து கரூர், தாந்தோணிமலை வெங்கட்ரமண பெருமாளுக்கு காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.பல ஆண்டுகளாக நடைபெறும் காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சியானது இந்த வருடமும் நடைபெற்றது. சுவாமி கனவில் வந்து கூறியதாக சொல்லப்படும், அளவுடைய ஒத்த செருப்பு செய்யப்பட்டது. தோலினால் செய்யப்பட்ட 70 இன்ச் அளவுடைய ஒத்த பாதம் செருப்புடன், கருங்கல் பகுதியினர் தாந்தோணி வந்தடைந்தனர்.

தாந்தோணிமலையை சுற்றி ஊர்வலமாக சென்ற அவர்கள் தொடர்ந்து, கரூர் மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய ஊர்களில் ஒத்த செருப்புடன் ஊர்வலமாக வலம் வருகின்றனர். புரட்டாசி கடைசி சனிக்கிழமை கரூர் மாநகரப் பகுதி வழியாக ஒத்த செருப்பை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக எடுத்து வந்து கல்யாண வெங்கட்ரமண சுவாமி பாதத்தில் சமர்ப்பித்து வேண்டுதலை நிறைவேற்றுவர். 

Tags:    

Similar News