உள்ளூர் செய்திகள்

ஆற்றில் மிதந்த முதியவர் பிணம்

Published On 2023-08-13 13:53 IST   |   Update On 2023-08-13 13:53:00 IST
  • நொய்யல் ஆற்றில் மிதந்த முதியவர் பிணத்தை கைப்பற்றி விசாரணை
  • ஆடு மேய்க்க சென்றவர் ஆற்றுக்குள் விழுந்தது எப்படி என்று போலீசார் விசாரணை

வேலாயுதம்பாளையம்,

கரூர் மாவட்டம் நொய்யல் பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி ( 67). இவர் தனக்கு சொந்தமான 4 மாடுகள், 10 ஆடுகளை தினசரி மேய்த்து வந்தார். வழக்கம்போல ஆடு, மாடுகளை மேய்ப்பதற்காக நொய்யல் பகுதியில் உள்ள வாய்க்கால் மேட்டு ஆற்றங்கரை பகுதிக்கு ஓட்டி சென்றுள்ளார். அங்கு ஆடு ,மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. ஆனால் மாலை 5 மணிக்கு மேல் ஆகியும் துரைசாமி வீட்டிற்கு திரும்பவில்லை. ஆடு, மாடுகளும் திரும்பி வரவில்லை.சந்தேகம் அடைந்த துரைசாமியின் மகன் விக்னேஷ் (23) என்பவர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை .இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் துரைசாமி அணிந்திருந்த செருப்பு, அவரதுஉடை நொய்யல் ஆற்று கரையில் கிடந்துள்ளது. இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நொய்யல் ஆற்றின் இடது கரை வழியாக சென்றுள்ளனர். அப்போது அங்கு முதியவர் துரைசாமி இறந்த நிலையில் பிணமாக காவிரி ஆற்று தண்ணீரில் மிதந்து கொண்டிருந்ததை பார்த்து வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வேலாயுதம்பாளையம் போலீசார், தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து துரைசாமியின் பிரேதத்தை தண்ணீரில் இருந்து மீட்டனர். உடலை கைப்பற்றிய போலீசார் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Tags:    

Similar News