உள்ளூர் செய்திகள்
கடவூர் அருகே நாட்டு துப்பாக்கி பறிமுதல்
- கடவூர் அருகே நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யபட்டது
- இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கரூர்:
கடவூர் அடுத்த, பாலவிடுதி எஸ்.ஐ. தர்மலிங்கம் மற்றும் போலீசார் கடவூர், கீழ்சேவாப்பூர் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி, வலையப்பட்டியில் உள்ள கருணகிரி என்பவர் தோட்டத்து கொட்டகையில் சோதனையிட்டனர்.
அப்போது அங்கு அரசு அனுமதி இல்லாமல் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் துப்பாக்கியை பறிமுதல் செய்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.