உள்ளூர் செய்திகள்

பயிற்சி பாசறைக் கூட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம்

Published On 2023-09-08 14:51 IST   |   Update On 2023-09-08 14:51:00 IST
  • பயிற்சி பாசறைக் கூட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
  • மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள்

கரூர்:

கரூர் மாவட்டம் புகழூர் நகர கழகம் சார்பில் காங்கே யம் படியூரில், வருகிற 24-ந் தேதி தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (பிஎல்ஏ-2) பயிற்சி பாச றைக் கூட்டம் தொட ர்பான ஆலோசனை கூட்டம் புகழூர் நகரக் கழக அலுவ லகத்தில் நடைபெ ற்றது.

கூட்டத்திற்கு அரவக்கு றிச்சி சட்டமன்ற உறுப்பினர் மொஞ்சனூர் இளங்கோ தலைமை வகித்தார். நகர கழக செயலாளரும், புகழூர் நகர்மன்ற தலைவருமான சேகர் என்கிறகுணசேகரன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக மாநில வர்த்தக அணி துணைத் தலைவரும், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரு மான முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.மூர்த்தி கலந்து கொண்டு வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

கூட்டத்தில் நகர்மன்ற துணைத் தலைவர் பிரதா பன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சரவ ணமூர்த்தி, மாநில, மாவட்ட, நகர கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள், வார்டு கழக செயலாளர்கள், கழக மூத்த முன்னோடிகள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags:    

Similar News