உள்ளூர் செய்திகள்

குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு

Published On 2023-08-09 07:13 GMT   |   Update On 2023-08-09 07:13 GMT
  • குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்ற கரூர் மாவட்டததை சேர்ந்தவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது
  • மாவட்ட நூலகத்தில் கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் விழா நடைபெற்றது

கரூர், 

டிஎன்பிஎஸ்சி குரூப் 4தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கலங்கரை விளக்கம் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசுப் பணியாளர் குரூப் 4 போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித்தேர்வுகள் கரூர் மாவட்ட மைய நூலகத்தில் நடந்தது. இப்பயிற்சிவகுப்புகளில் பங்கேற்ற மாணவர்கள் தேர்வில் வெற்றிபெற்று பணி நியமன ஆணை பெற்றுள்ளனர்.கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராகும் அருண் குமார், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வரித்தண்ட லராகும் லாவண்யா, வேளாண்மைத்துறையில் இளநிலை உதவியாளர்களாகும் வெங்கடேஷ், ஜெயபிரகாஷ், போக்குவரத்து துறையில் இள நிலை உதவியாளராகும் தீபன், கைத்தறி துறையில் இளநிலை உதவியாளரா கும் இளவரசன், வருவாய்த்துறையில் விஏஒவாகும் விக்னேஷ், ஆகியோர் பணி ஏற்க உள்ளனர். இவர்களுக்கு கலெக்டர் பிரபுசங்கர் நினைவுப்பரிசு வழங்கி, வாழ்த்தினார்.மாவட்ட திட்ட இயக்குனர் வாணிஈஸ்வரி, மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் உடனிருந்தனர்.

Tags:    

Similar News