உள்ளூர் செய்திகள்
சந்திராயன் நிலவில் இறங்கியதை கண்டுகளித்த கல்லூரி மாணவிகள்
- சந்திராயான்-3 நிலவில் தரை இறங்கியதை கரூர் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள்நேரில் கண்டுகளித்து மகிழ்ந்தனர்
- பண்டுதகாரன்புதூர் அரசு மகளிர் கல்லூரியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது
வேலாயுதம்பாளையம்
கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூர் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சந்திராயன் நிலவில் தரை இறங்கும் நிகழ்ச்சியை கண்டுகளிப்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டது. கல்லூரி மாணவிகள் நேரடியாக பார்த்து மகிழ்ந்தனர். இதற்கான ஏற்பாடுகளை அரசு கல்வி நிறுவனங்களின் தலைவரும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் துணைக் குழு உறுப்பினருமான நடேசன், செயலாளர் இன்ஜினீயர் கண்ணன், துணை முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.