உள்ளூர் செய்திகள்

உலக புத்தக தின விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2023-04-25 12:03 IST   |   Update On 2023-04-25 12:03:00 IST
  • கரூர் மைய நூலகத்தில் நடைபெற்றது
  • மாணவர்களுக்கு நூலக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது

கரூர்,

உலக புத்தக தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட மைய நூலகத்தில் மாணவ மாணவியருக்கான நூலக விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட மைய நூலகர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. அதில் அரசு பள்ளி மாணவ மாணவியர் 300 பேருக்கு நன்கொடை மூலம் நூலக அடையாள அட்டைகளை, வாசகர் வட்டத் தலைவர் தீபம் சங்கர் வழங்கினார். மேலும் உலக புத்தக தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட மைய கிளை ஊர்புற நூலகங்களில் 44 புரவலர்கள், இரண்டு பெரும் புரவலர்கள், இரண்டு கொடையாளர்கள் சேர்க்கப்பட்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட மைய நல் நூலகர் சுகன்யா, மாநகராட்சி கோட்டைமேடு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை விஜயா, நூலகர் கார்த்தி நிவாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல் கரூர் மாநகராட்சி காந்திகிராமம் நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவியர் புத்தக வாசிப்பை மேற்கொண்டனர். நிகழ்ச்சியில் ஆசிரியை திலகவதி உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News