உள்ளூர் செய்திகள்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசன விழா

Published On 2023-01-07 08:39 GMT   |   Update On 2023-01-07 08:39 GMT
  • கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது
  • நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகம், தரிசனம், சாந்துக்கட்டளையும், காலை 10 மணிக்கு மேல் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடும் நடந்தது

கரூர்:

கரூர் அலங்காரவல்லி, சவுந்தரநாயகி சமேத கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கடந்த 28ம் தேதி துவங்கி திருக்கல்யாண உற்சவ விழா நடந்தது.நேற்று அதிகாலை 5 மணிக்கு மேல் 6.30 மணிக் குள் நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகம், தரிசனம், சாந்துக்கட்டளையும், காலை 10 மணிக்கு மேல் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடும் நடந்தது. விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த சிறப்பு பந்தலுக்கு சுவாமி மீண் டும் வந்தார். அங்கு மட்டையடி நிகழ்ச்சியும், சித் சபா பிரவேசமும் நடந்தது.ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெய தேவி, செயல் அலுவலர் சரவணன், சிவாச்சாரியார்கள், உபயதாரர்களான கரூர் ஆயிர வைசியர்கள் மற்றும் கரூர் தைலா சில்க்ஸ் சண்முகசுந்தரம் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.




Tags:    

Similar News