உள்ளூர் செய்திகள்

வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பலி

Published On 2023-07-26 13:49 IST   |   Update On 2023-07-26 13:49:00 IST
  • சரக்கு வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்
  • படுகாயம் அடைந்த நண்பருக்கு மருத்துவமனையில் சிகிச்சை

கரூர்,

கரூர் மாவட்டம், லிங்கமநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த சமீர் முகமது (வயது 19), இவர் தனது நண்பர் நவ்ஃபுல் உடன், கரூரில் இருந்து அரவக்குறிச்சி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். மலைக்கோவிலூர் அருகே வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சரக்கு வாகனத்தில் மோதி இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சரக்கு வாகனம் சமீர் முகமது தலை மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்தார். மேலும், பின்னால் அமர்ந்து வந்த நவ்ஃபுல் படுங்காயம் அடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். உயிரிழந்த சமீர் முகமது உடலை போலீசார் கைப்பற்றி அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News