2 கல்குவாரிகள் அமைப்பதற்கான கருத்துகேட்பு கூட்டம்
- கருத்துக் கேட்பு கூட்டம் குப்பம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்ட பத்தில் நடைபெற்றது.
- கல் குவாரிக்கான திட்ட அறிக்கையில் சரியான தகவல்களை அதிகாரிகள் தயார் செய்து கொடுக்க வேண்டும் என்றார்.
வேலாயுதம்பாளையம்
கரூர் மாவட்டம் நொய் யல் அருகே குப்பம் மற்றும் வேட்டமங்கலம் இடங்களில் கல்குவாரி அமைக்க திட்டமி டப்பட்டு ள்ளது. இதற்கான கருத்துக் கேட்பு கூட்டம் குப்பம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்ட பத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சைபுதீன் தலைமை வகித்தார். மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதி காரி ஜெயலட்சுமி முன் னிலை வகித்தார்.
கூட்டத்தில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப் புத்துறை அதிகாரிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் முகிலன், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை பதிவு செய்த னர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் முகிலன் பேசும் போது,
கரூர் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்கு வாரிகள் செயல்பட்டு வரு கிறது. மாவட்டத்தில் செயல் படும் ஒரு சில கல்குவாரி களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 50 மடங்கு கூடுதலாக வெட்டி எடுக்கப் பட்டு வருவதை அதிகா ரிளால் கண்டறியப்பட்டுள் ளது.
கல்குவாரிகளில் வெடி வெடிப்பதற்கான நேரத்தை பின் பின்பற்றுவது கிடை யாது. கல்குவாரிகளில் போர்டு வைக்க வேண்டும் ஆனால் அவற்றை பல்வேறு கல் குவாரி நிறுவனங்கள் செயல்படுத்துவது இல்லை.
பரமத்தி ஒன்றியம் முழு வதும் சட்ட விரோ தமாக இயங்கும் கல்கு வாரிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய மாவட்ட நிர்வாகம் வேடிக்கை பார்த்து வருகிறது.
சுருக்க அறிக்கையில் முழுமையான விபரங்கள் எதுவும் இல்லை. கல் குவாரிக்கான திட்ட அறிக்கையில் சரியான தகவல்களை அதிகாரிகள் தயார் செய்து கொடுக்க வேண்டும் என்றார்.