உள்ளூர் செய்திகள்
- கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் 2 கல்லுாரி மாணவிகள் மாயமாகி உள்ளனர்
- குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
கரூர்,
குளித்தலை அடுத்த, மருதுார், கணேசபுரம் ஊராளி பள்ளம் பகுதியை சேர்ந்தவர் தமிழரசி. கூலித்தொழிலாளி. இவரது மகள் நமீதா. திருச்சி தனியார் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். வீட்டிலிருந்த நமீதா திடீர் என மாயமாகி உள்ளார். பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.
இதேபோல், சேப்ளாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சித்ரா, கூலித் தொழிலாளி. இவரது மகள் சங்கீதா. திருச்சி அரசு கலைக்கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு தமிழ் படித்து வந்தார். வீட்டிலிருந்து வெளியே சென்றவர். அதன் பின்னர் வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களை தேடியும், விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. மாணவிகள் மாயமானது குறித்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்