உள்ளூர் செய்திகள்
அமைச்சர் செந்தில் பாலாஜி நலம் பெற வேண்டி கரூரில் 10 பேர் மொட்டை அடித்தனர்
- அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில், அவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடைபெற்று உள்ளது.
- இதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
கரூர்
அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில், அவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடைபெற்று உள்ளது.இந்த நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி பூரண குணமடைய வேண்டி கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில் தி.மு.க.வினர் 10 பேர் வேண்டுதல் மொட்டை அடித்தனர். இதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கரூர் தெற்கு மாநகர பகுதி தி.மு.க. செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, 41வது வார்டு திமுக செயலாளர் விஸ்வா ஏற்பாடு செய்திருந்தார்.