உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பு.

கருமாரியம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி யாகம்

Published On 2023-02-21 13:54 IST   |   Update On 2023-02-21 13:54:00 IST
  • சிவராத்திரி, அமாவாசையை முன்னிட்டு யாகபூஜைகள் நடைபெற்றது.
  • அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த செம்போடை மேற்கு கருமாரியம்மன் கோவிலில் உலக நலன் வேண்டி சிவராத்திரி, அமாவாசையை முன்னிட்டு யாகபூஜைகள் நடை பெற்றது.

யாகத்தில் விக்னேஷ்வர பூஜையுடன், சுப்பிரமண்யர், ராமர், நவக்கிரஹக பரிகார பூஜைகளுடன் வேதவல்லி மற்றும் வாராகி அம்மனுக்கு உலக நன்மை வேண்டி பல்வேறு திரவியங்கள், நிகும்பல (மிளகாய்) வேள்வியுடன் பூர்ணாஹுதியும், தீபாராதனையும் நடைபெற்றது.

தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News