புதுச்சேரி

தீமிதி திருவிழா நடைபெற்ற போது எடுத்த படம்.

null

காரைக்கால் அம்பகரத்தூர் மகா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

Published On 2023-05-16 07:54 GMT   |   Update On 2023-05-16 10:09 GMT
  • பத்ரகாளியம்மன் தேவஸ்தானத்திற்குட்பட்ட மகாமாரியம்மன் தீமிதி திருவிழா, கடந்த 1-ந் தேதி பூச்சொரிதல் உற்சவத்துடன் தொடங்கியது.
  • சில பக்தர்கள் அலகு காவடி ஏந்தியவாறு தீக்குழியில் இறங்கி அம்மனை வழிபட்டனர்.

புதுச்சேரி:

காரைக்காலை அடுத்த அம்பகரத்தூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் தேவஸ்தானத்திற்குட்பட்ட மகாமாரியம்மன் தீமிதி திருவிழா, கடந்த 1-ந் தேதி பூச்சொரிதல் உற்சவத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வீதி உலாவாக வந்து தீக்குழி நடைபெற்ற இடத்தின் முன்பு நிறைவு பெற்றது.

தொடர்ந்து, திரளான பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு தீக்குழியில் இறங்கி மாரியம்மனை வழிபட்டனர். சில பக்தர்கள் அலகு காவடி ஏந்தியவாறு தீக்குழியில் இறங்கி அம்மனை வழிபட்டனர். விழாவில் கோவில் அறங்காவலர் குழு நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை தரிசித்தனர்.

Tags:    

Similar News