உள்ளூர் செய்திகள்

நவராத்திரி திருவிழா நாளை மறுநாள் தொடங்க இருப்பதையொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உழவாரப்பணி செய்த பெண் சிவனடியார்கள்

Published On 2023-10-13 14:38 GMT   |   Update On 2023-10-13 14:38 GMT
கோவில் வளாகத்தை கழுவி சுத்தம் செய்தனர்

கன்னியாகுமரி:

உலகப்புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இந்த திருவிழா 24-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகள், சிறப்பு வழிபாடு கள், அலங்கார தீபாராதனை, அன்னதானம், வாகன பவனி, சப்பர ஊர்வலம், நாதஸ்வர கச்சேரி, பாட்டு கச்சேரி, பரதநாட்டியம், சமய உரை போன்ற பல் வேறு நிகழ்ச்சிகள் நடக்கின் றன.

10-ம் திருவிழாவான 24-ந்தேதி அம்மன் பாணா சுரனை வதம் செய்து அழிக்கும் பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. 1-ம் திருவிழாவான நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலையில் அம்மன் கொலு மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி நாகர்கோ வில் அருகே உள்ள இருளப்பபுரம் பிரசன்ன பார்வதி பசுபதீஸ்வரர் கோவில் பெண் சிவனடியார்கள் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலில் உழவாரப்பணி யில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள்அம்மன் கொலு விருக்கும் கொலுமண்டபம், 24 மணி நேரமும் அணையா விளக்கு எரிந்துகொண்டி ருக்கும் வாடா விளக்கு மண்டபம், கொடிமர பிரகாரம், மூலஸ்தான கருவறை முன்பு உள்ள மண்டபம், உள்பிரகாரம், வெளி பிரகாரம் மற்றும் அனைத்து சன்னதி பகுதி களிலும் இந்த உழவாரப்பணி நடந்தது. சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண் சிவனடி யார்கள் கோவில் முழுவதும் தண்ணீர் மூலம் கழுவி சுத்தம் செய்தனர். இந்த உழவாரப்பணி நடந்ததை தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வளாகம் முழுவதும் புதுப் பொலிவுடன் காட்சி அளிக்கிறது.

Tags:    

Similar News