உள்ளூர் செய்திகள்

பாலவிளை மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவிகள் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்

Published On 2023-10-13 08:01 GMT   |   Update On 2023-10-13 08:01 GMT
  • கலெக்டர் தகவல்
  • துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பல் துறை பணி விளக்க முகாமினை கலெக்டர் பார்வையிட்டார்.

நாகர்கோவில்:

விளவங்கோடு வருவாய் கிராமத்திற்குட்பட்ட பாலவிளை அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் முன்னிலையில் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, பேசியதாவது:-

தமிழ்நாடு அரசு பொது மக்களின் அடிப்படை தேவைகளை நிறை வேற்றும் வகையில் மாவட்டத்திற்குட்பட்ட ஒவ்வொரு வருவாய் கிரா மங்களிலும் முதல் மற்றும் 2 கட்டங்களாக சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் நடத்தி பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று தகுதியான பயனாளிகளுக்கு உடனடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இம்முகாமின் நோக்கம், அரசு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்ட உதவிகள் குறித்து பொது மக்கள் அறிந்து பயன் பெறுவதே ஆகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 4,77,000 குடும்ப அட்டைகள் உள்ளது. கலைஞர் மகளிர் உரிமம் திட்டத்திற்கு சுமார் 4 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் விண்ணப்பித்துள்ளார்கள். தகுதியான பயனாளிகளுக்கு ரூ.1000 வழங்குவதற்கான நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தமிழ்நாடு முதல்-அமைச்சரால் கடந்த மாதம் 15-ந்தேதி இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. விடுப்பட்டவர்கள் வட்டாட்சியர் அலுவலகம், சப்-கலெக்டர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமம் திட்டம் தொடர்பாக குறைகள் இருந்தால் தகுந்த சான்றிதழ் வழங்கி அக்குறை களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.

கடந்த வாரம் பெய்த மழையினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்கள், தாசில்தார்கள் ஆகியோரிடம் அறிக்கைகள் பெறப்பட்டு, கலந்தாய்வு மேற்கொண்டு போர்க்கால அடிப்படையில் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களிலும் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரி வித்தார். முகாமில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் சர்வதேச பெண் குழந்தைகள் தின உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

முகாமில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு நோட்டுப்புத்தகங்களையும், 4 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல், வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கினார். முன்னதாக பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பல் துறை பணி விளக்க முகாமினை கலெக்டர் பார்வையிட்டார்.

Tags:    

Similar News