உள்ளூர் செய்திகள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தோவாளை சந்தையில் பூக்கள் விலை உயர்வு

Published On 2023-09-16 13:28 IST   |   Update On 2023-09-16 13:28:00 IST
  • கிலோ ரூ.500-க்கு விற்ற மல்லி ரூ.1500-க்கு விற்பனை
  • பிச்சி- ரூ.800, மல்லிகை- ரூ.1500, கிரேந்தி- ரூ.50, செவ்வந்தி- ரூ.100, அரளி- ரூ.100, சம்பங்கி- ரூ.180

நாகர்கோவில் :

குமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தைக்கு பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் வருகின்றன. நெல்லை மாவட்டம் பழவூர், ரோஸ்மியாபுரம், சங்கரன்கோவில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லபுத்தூர், ராஜபாளையம் பகுதியில் இருந்து பல்வேறு பூக்கள் வருகின்றன. மதுரை மாவட்டத்தில் இருந்து மல்லிகை, ஊட்டி மற்றும் பெங்களூருவில் இருந்து ரோஜா பூக்கள் போன்றவையும் தினமும் வருகின்றன.

மேலும் குமரி மாவட்டத்தில் செண்பகராமன்புதூர், ஆரல்வாய்மொழி போன்ற பகுதிகளில் இருந்தும் பூக்கள் தோவாளை சந்தைக்கு வருகிறது.

இந்த பூக்கள் மாவட்டம் முழுவதும் விற்பனைக்கு செல்கிறது. இது தவிர கேரள மாநில வியாபாரிகளும் இங்கு வந்து பூக்களை வாங்கி செல்கின்றனர்.

இந்த நிலையில் நாளை மறுநாள் (18-ந்தேதி) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக தோவாளை சந்தையில் இன்றே பூக்கள் விலை அதிகரித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.500-க்கு விற்கப்பட்ட மல்லிகை இன்று 3 மடங்கு அதிகரித்து ரூ.1500-க்கு விற்பனையானது. பிச்சிப்பூ கிலோ ரூ.800-க்கு விற்கப்பட்டது. தோவாளை சந்தையில் இன்று பூக்களின் விலை விவரம் கிலோவுக்கு வருமாறு:-

பிச்சி- ரூ.800, மல்லிகை- ரூ.1500, கிரேந்தி- ரூ.50, செவ்வந்தி- ரூ.100, அரளி- ரூ.100, சம்பங்கி- ரூ.180, வாடாமல்லி-ரூ.50, கனகாம்பரம்-ரூ.700, ரோஜா- ரூ.190, மரிக்கொழுந்து- ரூ.100, கோழிக்கொண்டை-ரூ.50, தாமரை (1) -ரூ.5.

Tags:    

Similar News