உள்ளூர் செய்திகள் (District)

புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான மேலாண்மை விழா

Published On 2023-11-10 07:43 GMT   |   Update On 2023-11-10 07:43 GMT
  • கல்லூரி முதல்வர் மகேஸ்வரன் முன்னிலை வகித்து, பேசினார்.
  • பேராசிரியை ஜஸ்மின் சுகுனா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார்.

நாகர்கோவில்:

சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான 8-வது மேலாண்மை விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி தாளாளர் மரியவில்லியம் தலைமை தாங்கினார். மாணவி சகாய ரினோஷா வரவேற்றார். விழாவின் அமைப்பு செயலாளர் பேராசிரியை பமிமா விழாவிற்கான அறிமுக உரையாற்றினார். கல்லூரி முதல்வர் மகேஸ்வரன் முன்னிலை வகித்து, பேசினார்.

கல்லூரி பொருளாளர் பிரான்சிஸ் சேவியர் வாழ்த்தி பேசினார். பேராசிரியை ஜஸ்மின் சுகுனா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார். சிறப்பு விருந்தினராக பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் ஓய்வுபெற்ற துணை மேலாளர் அமல்ராஜ் கலந்துகொண்டு பேசினார்.

விழாவில் மாணவர்களுக்கான சிறந்த மேலாளர் போட்டி, படத்தொகுப்பு போட்டி, வினாடி-வினா, மவுன மொழி நாடகம் போன்ற பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசுடன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முடிவில் இணை ஒருங்கிணைப்பா ளர் மாணவர் சேக் சித்தா அர்ஷக் நன்றி கூறினார்.

விழாவில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை கல்லூரியின் வணிக மேலாண்மை துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து செய்திருந்தனர்.

Tags:    

Similar News