உள்ளூர் செய்திகள்

மணவாளக்குறிச்சியில் கூட்டுறவு சங்கம் முன் மாற்றுத்திறனாளி பெண் போராட்டம்

Published On 2023-07-14 07:46 GMT   |   Update On 2023-07-14 07:46 GMT
  • கூட்டுறவு சங்க தலைவர் அய்யப்பன் அவரை பணியில் சேர விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.
  • கூட்டுறவுத்துறை களப்பணியாளர்கள் 2 பேர் கூட்டுறவு சங்கத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.

கன்னியாகுமரி:

மண்டைக்காடு புதூரை சேர்ந்தவர் ஜாண்சன். இவரது மனைவி ஜெய மலர்விழி (வயது 40).மாற்றுத்திறனாளி. இவர் மணவாளக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ரேசன் கடையில் விற்பனையாளராக வேலையில் சேர கடந்த 4 நாட்களுக்கு முன்பு பணி நியமன ஆணைப் பெற்று கூட்டுறவு சங்கத்திற்கு சென்றார்.அங்கு கூட்டுறவு சங்க தலைவர் அய்யப்பன் அவரை பணியில் சேர விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை ஜெய மலர்விழி மீண்டும் அவர் மணவா ளக்குறிச்சி கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு சென்றார்.அப்போதும் அவரை பணியில் சேர விடவில்லை என கூறப்படுகிறது.இதனால் அவருக்கு ஆதரவாக அப்பகுதி மக்கள் கூட்டுறவு சங்கம் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.தகவலறிந்த கல்குளம் தாசில்தார் கண்ணன், மண வாளக்குறிச்சி இன்ஸ் பெக்டர் பெருமாள் ஆகியோர் விரைந்து சென்று கூட்டுறவு சங்க தலைவர் அய்யப்பனிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

தாசில்தாரிடம் அய்யப்பன் கூறியதாவது:- இங்கு 2 பணியிடங்களில் ஒருவர் பணியில் சேர்ந்து விட்டார்.15 வருடம் முன் இங்கு வேலை பார்த்து நீண்ட நாள் விடுப்பில் சென்ற மற்றொருவர் தற்போது வேலை கேட்டு வழக்கு தொடர்ந்து தீர்ப்பு பெற்றுள்ளார்.இதற்கு கூட்டுறவு சங்கம் சார்பில் அப்பீல் செய்ய வேண்டியுள்ளது.அதனால் கூட்டுறவு சங்க குழுவினர்களுடன் கலந்தாலோசித்துதான் முடிவு செய்ய முடியும் என்றார்.இதனால் இந்த விவகாரத்தில் முடிவு ஏற்படவில்லை. இதற்கிடையே கூட்டுறவுத்துறை களப்பணியாளர்கள் 2 பேர் கூட்டுறவு சங்கத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சுமூக முடிவு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை முடிவில் மாலை 5.30 மணியளவில் ஜெய மலர்விழி பணியில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு ஆதரவாக கூட்டுறவு சங்கம் முன் திரண்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News