உள்ளூர் செய்திகள்

கோப்பு காட்சி.

நாகர்கோவிலில் பழக்கடைக்காரர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு

Published On 2023-04-29 08:01 GMT   |   Update On 2023-04-29 08:01 GMT
  • வாலிபர் தப்பி ஓட்டம்
  • எங்கள் ஏரியாவில் வந்து கடை வைத்துவிட்டு, எனக்கே பழம் தர மாட்டாயா என மிரட்டல்.

கன்னியாகுமரி:

நாகர்கோவில் அருகே வடக்கு சூரங்குடி தட்டான் விளை பகுதியை சேர்ந்தவர் பிரேம் ஆனந்த் (வயது 30). இவர் ராமன்புதூர் பகுதி யில் பழக்கடை வைத்துள்ளார்.

நேற்று பிரேம் ஆனந்த் வழக்கம்போல் கடையை திறந்து இருந்தார். இரவு 10 மணிக்கு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு செல்வதற்கு தயாரானார். இதையடுத்து கடையில் இருந்த பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், பழம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அதற்கு பிரேம் ஆனந்த், பழங்களை கடையில் உள்ளே வைத்து விட்டதால் தற்பொழுது எடுக்க முடியாது என்று கூறியுள்ளார். எங்கள் ஏரியாவில் வந்து கடை வைத்துவிட்டு, எனக்கே பழம் தர மாட்டாயா என்று கூறி பிரேம் ஆனந்திடம் அந்த வாலிபர் தகராறில் ஈடுபட்டார். திடீரென தான் கையில் பாட்டிலில் வைத்தி ருந்த பெட்ரோலை பிரேம் ஆனந்த் மீது ஊற்றினார். பின்னர் கையில் வைத்தி ருந்த தீப்பெட்டியால் பிரேம் ஆனந்த் மீது தீ வைத்தார். பிரேம் ஆனந்த் உடலில் தீ எரிந்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தனர்.

அவர்கள் பிரேம் ஆனந்த் உடலில் எரிந்த தீயை அணைத்து சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அதற்குள் தீ வைத்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து நேசமணி நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீ சார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற் கொண்டனர். ஆஸ்பத்திரி யில் பிரேம் ஆனந்த் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். பிரேம் ஆனந்த் கூறிய தகவல் மற்றும் சி.சி.டி.வி. கேமராவில் கைப்பற்றப்பட்ட காட்சிகளை வைத்து போலீசார் பிரேம் ஆனந்த் மீது தீ வைத்த வாலிபரை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணை யில் பிரேம் ஆனந்த் மீது தீ வைத்த வாலிபர் அதே பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண் டுள்ளனர்.

போலீசார் தேடுவது அறிந்த அந்த வாலிபர் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப் படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட் டுள்ளனர். இது குறித்து பிரேம் ஆனந்த் கொடுத்த புகாரின்பேரில் நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடைக் காரர் மீது பெட் ரோல் ஊற்றி தீவைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News