உள்ளூர் செய்திகள்

பாலமோர் ரோட்டில் இரு பக்கமும் 10 அடி அகலப்படுத்தும் பணிக்கு வணிகர்கள்-கடை உரிமையாளர்களுக்கு இடத்திற்கான இழப்பீட்டினை வழங்க வேண்டும்

Published On 2023-09-15 08:27 GMT   |   Update On 2023-09-15 08:27 GMT
  • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. அறிக்கை
  • பாலமோர் சாலைக்காக விட்டு கொடுக்கும் இடத்திற்கு போதுமான இழப்பீட்டினை வழங்குவதற்கு மாநகராட்சியால் இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில்:

முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பாலமோர் ரோட்டில் இரு பக்கமும் 10 அடி அகலப்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மேயர், வணிகர்கள், கடை உரிமையாளர்களை அழைத்து பேசி உள்ளனர். அப்போது சாலையை விரிவுபடுத்துவதற்கு ஏதுவாக 10 அடி அகலத்தில் இடத்தை விட்டு கொடுக்கும்படி கேட்டுள்ளார்கள். மேலும் பாலமோர் சாலைக்காக விட்டு கொடுக்கும் இடத்திற்கு போதுமான இழப்பீட்டினை வழங்குவதற்கு மாநகராட்சியால் இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சாலையை விரிவுபடுத்த இடம் தரவில்லை என்றால் கட்டிடத்தின் மேல் நகர் ஊரமைப்பு திட்டம் 56, 57-ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு தங்கள் கட்டிட உபயோகம் நிறுத்தப்படும் என்றும் அச்சுறுத்தி வருகின்றனர்.மேலும் இடத்தை விட்டு தர வணிகர்கள் மற்றும் கடை உரிமை யாளர்கள் சம்ம தித்து விட்டதாக உண்மைக்கு மாறாக வெளியிட்டுள்ளார்கள். சாலை விரிவாக்கத்திற்கு இடம் விட்டு தர மாட்டோம் என்று வணிகர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் கூறவில்லை. மேற்கண்ட இடத்திற்கான இட மதிப்பீட்டில் இழப்பீடு வழங்கினால் அவர்கள் தருவதற்கு தயாராக உள்ளார்கள்.

அரசு இந்த பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதோடு மேற்கண்ட சாலையினை அகலப்படுத்துவதற்கு தேவையான இடத்திற்குரிய இன்றைய மதிப்பீட்டில் இழப்பீட்டு தொகையினை அனுமதித்து வணிகர்கள் மற்றும் கடை உரிமை யாளர்களின் நலனை பாதுகாத்திட வேண்டுமென அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News