திருவட்டார், ராஜாக்கமங்கலத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதலில் தொழிலாளி-மாணவன் சாவு
- பூவன்கோடு பகுதியில் செல்லும்போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது. எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் மோதிக் கொண்டன.
- விபத்து குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி :
திருவட்டார் அருகே உள்ள அருவிக்கரை பகுதியை சேர்ந்தவர் விஜய் (வயது 25), தொழிலாளி.
இவர் மோட்டார் சைக்கி ளில் ஆற்றூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். பூவன்கோடு பகுதியில் செல்லும்போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது. எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் விஜய் மற்றும் எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் வந்த செந்தறவிளை, ஆற்றூர் பகுதியை சேர்ந்த ஜாண் சாலமோன் (35), அவரது மனைவி ருயா, 5 வயது மகள் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து ஜான் சாலமோன் குடும்பத்தி னரை மீட்டு தனியார் ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் தலையில் காயம் அடைந்த விஜய் ஆசாரி ப்பள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதி க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பல னின்றி இன்று காலை விஜய் பரிதாபமாக இறந்தார்.
அவரது உடலை இன்று பிரேத பரிசோதனை செய்கி றார்கள். இது சம்மந்தமாக ஜாண்சாலமோன் கொடுத்த புகாரின்பேரில் திருவட்டார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகி றார்கள்.
நாகர்கோவில் கீழ ஆசாரி பள்ளம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி குமார் ராஜ், டெய்லர். இவரது மகன் ஜெர்வின் ஸ்டார் (15). நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த இவன், நேற்று விடுமுறை என்பதால் தனது தாயார் வேலை பார்த்து வரும் பழவிளை அருகே உள்ள கிளவுஸ் கம்பெனிக்கு தாயாரை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றான்.
தாயாரை அங்கு இறக்கி விட்டு அவன் நாகர்கோவில் ராஜாக்கமங்கலம் ரோட்டை கடந்து செல்லும் போது பருத்தி விளையில் இருந்து எறும்பு காடு நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் ஜெர்வின் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தி னர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜெர்வின் ஸ்டார் பரிதாபமாக உயிரிழந்தான்.
மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த வேம்ப னூர் புளியடி காலனி பகுதியை சேர்ந்த மணி மகன் காட்வின் (20) அவரது நண்பர் புளியடி காலனியை சேர்ந்த ஆகாஷ் (16) ஆகியோர் முகம் மற்றும் கைகளில் லேசான காயங்களுடன் தப்பினர்.அவர்கள் இருவரும் ராஜாக்கமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.