உள்ளூர் செய்திகள்
மார்த்தாண்டம் அருகே தூக்கு போட்டு தொழிலாளி தற்கொலை
- வீட்டை விட்டு பிரிந்து தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
- மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு
குழித்துறை :
மார்த்தாண்டம் போலீஸ நிலையத்துக்கு உட்பட்ட பாகோடு சங்கரம்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துநாயகம் (வயது 85), தொழிலாளி. இவர் வீட்டை விட்டு பிரிந்து தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி இவர் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அதன்பிறகு அவர் இவரது மகன் ஜேம்ஸ் (51) ,வாடகை வீட்டில் தேடி சென்று உள்ளார். அப்போது முன் பக்க கதவு அடைத்திருந்துள்ளது, இதனால் ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக காணப்பட்டுள்ளார்.இதை எடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்