சுசீந்திரம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
- குழந்தை இல்லாத விரக்தியிலும் இருந்துவந்தாராம்
- 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார்
என். ஜி. ஓ. காலனி :
சுசீந்திரம் அருகே உள்ள தேவகுளம் மேற்கு தெருவை சேர்ந்தவர் மாலையப்பன் (வயது 59), தொழிலாளி.இவரது மனைவி லட்சுமி ( 50), தேவகுளம் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆயா வாக பணிபுரிந்து வருகிறார்.
மாலையப்பன் உடல்நிலை சரியில்லாமலும், குழந்தை இல்லாத விரக்தியிலும் இருந்துவந்தாராம். இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் விஷம் குடித்து வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மனைவி லட்சுமி, அக்கம் பக்கத்தினர் உதவி யுடன் மாலையப்பனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாலையப்பன் இன்று அதிகாலை பரிதாப மாக இறந்தார்.
இது குறித்து அவரது மனைவி லட்சுமி, சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.