உள்ளூர் செய்திகள்

வடசேரி பஸ் நிலையத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு கத்திக்குத்து - ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதி

Published On 2022-12-08 12:06 IST   |   Update On 2022-12-08 12:06:00 IST
  • இரவு நேரங்களில் வெளியூர்க ளுக்கு செல்பவர்களும் அதிக அளவு வந்து செல்வ தால் எப்பொழுதும் பஸ் நிலையத்தில் கூட்டம் நிரம்பி வழியும்.
  • கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த முதியவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்

நாகர்கோவில்:

நாகர்கோவில் வடசேரி பஸ்நிலையம் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும்.

காலை, மாலை நேரங்களில் அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கூட்டம் அதிக மாக இருக்கும். இரவு நேரங்களில் வெளியூர்க ளுக்கு செல்பவர்களும் அதிக அளவு வந்து செல்வ தால் எப்பொழுதும் பஸ் நிலையத்தில் கூட்டம் நிரம்பி வழியும். இதனால் வடசேரி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.பஸ்நிலையத்திற்குள் புற காவல் நிலையம் அமைக்கப பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வரு கிறது.

இந்த நிலையில் நேற்று இரவு பஸ் நிலையத்தை யொட்டியுள்ள உழவர் சந்தை பகுதியில் ரோட்டோரத்தில் கணவன்-மனைவி படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் திடீரென ரோட்டோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதையடுத்து அந்தப் பெண் கூச்சலிட்டார். உடனே பக்கத்தில் படுத்து இருந்த அவரது கணவர் கண்விழித்தார். அப்போது மனைவியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட முதியவரிடம் அவர் தகராறில் ஈடுபட்டார். இதனால் அவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர் அந்த முதியவரை சரமாரியாக கத்தியால் குத்தினார்.

இதையடுத்து கணவன் மனைவி இருவரும் அங்கிருந்து தப்பி சென்று விட்ட னர். கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த முதியவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இது பற்றி தகவல் அறிந்த தும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முதிய வரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் குமரி மேற்கு மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. குடிபோதையில் ரோட்டோரத்தில் படுத்தி ருந்த பெண்ணிடம் சில்மி ஷத்தில் ஈடுபட்டதும் முதற் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீசார் முதியவரை கத்தி யால் குத்தி விட்டு தப்பி ஓடிய கணவன் மனைவியை தேடி வருகிறார்கள்.

நேற்று இரவு நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.

Tags:    

Similar News