உள்ளூர் செய்திகள்

மார்த்தாண்டத்தில் ஆவணங்கள் கேட்டு போலீஸ் நிலையத்தில் வாக்குவாதம் செய்ததாக பெண் கைது

Published On 2022-07-27 07:17 GMT   |   Update On 2022-07-27 07:17 GMT
  • குழித்துறையை அடுத்த வெட்டுமணி பகுதியில் தூக்க மாத்திரைகள் தின்று தற்கொலைக்கு முயன்று உள்ளார்.
  • போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மூலம் மதுரை தடயவியல் குழுவினர் அந்த ஆவணங்களை கைப்பற்றி விசாரணை

கன்னியாகுமரி :

களியக்காவிளை மேக்கோடு பகுதியை சேர்ந்த வர் ஜோஸ்பின் (வயது 32). இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி குழித்துறையை அடுத்த வெட்டுமணி பகுதியில் தூக்க மாத்திரைகள் தின்று தற்கொலைக்கு முயன்று உள்ளார்.

அப்போது தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது மார்த்தாண்டம் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டராக இருந்த சுரேஷ்குமார், தன்னிடம் வாக்குமூலம் பெற்று போலியான கையெழுத்திட்டு ஏமாற்றி விட்டதாக நாகர்கோவில் எஸ்.பி.அலுவலகத்தில் ஜோஸ்பின் புகார் செய்திருந்தார்.

புகாரின் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மூலம் மதுரை தடயவியல் குழுவினர் அந்த ஆவணங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஜோஸ்பின் நேற்று மாலை மார்த்தாண்டம் காவல் நிலையத்திற்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். தனக்கு அந்த ஆவணங்கள் தேவை எனக் கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.

அப்போது பணியில் இருந்த ஏட்டு தீபா, ஆவணங்கள் அனைத்தும் மதுரை தடயவியல் குழு வினரிடம் உள்ளது என தெரிவித்து உள்ளார். ஆனாலும் இதனை கேட்காமல் ஜோஸ்பின் அங்கு காத்திருப்பு போரா ட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்.

இதனையடுத்து ஏட்டு தீபா கொடுத்த புகாரின் பேரில் காவல் நிலையத்தில் பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி ஜோஸ்பின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மார்த்தாண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Tags:    

Similar News