உள்ளூர் செய்திகள்

செம்மண் கடத்தும் கும்பலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

Published On 2023-10-28 08:57 GMT   |   Update On 2023-10-28 08:57 GMT
  • களியக்காவிளை-மார்த்தாண்டம், பளுகல் பகுதியில் நடைபெறுகிறது
  • சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

களியக்காவிளை :

களியக்காவிளை, மார்த்தாண்டம், பளுகல் சுற்று வட்டார பகுதிகளான அதங்கோடு, குழித்துறை, பழவார், திக்குறிச்சி, மலையோரம், இளஞ்சிறை, மூவோட்டுகோணம் ஆகிய பகுதிகளில் இருந்து ஆற்றில் மணல் கடத்தல், தனியார் நிலங்களில் இருந்து பாறைகள் உடைத்து கடத்தல் போன்ற சட்ட விரோத செயல்கள் நடந்து வந்தது.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் இணைந்து தீவிர நடவடிக்கை எடுத்ததால் ஆற்றில் மணல் கடத்தல் கட்டுப்ப டுத்தப்பட்டது. ஆனால் தற்போது களியக்காவிளை, மார்த்தாண்டம், பளுகல் சுற்றுவட்டார பகுதிகளில் செம்மண் கடத்தல் அதிகரித்துள்ளது. தனியார் நிலங்கள், புறம்போக்கு நிலங்களில் இருந்து அதிகமாக செம்மண் கடத்தப்படுகிறது. இதற்காக களியக்காவிளை, மார்த்தாண்டம், பளுகல் பகுதிகளில் குறிப்பிட்ட சில கும்பல்கள் உள்ளன. இதுகுறித்து புகார் எழுந்ததால் தனிப்படை அமைத்து கடத்தல் வாகனங்கள் ஜே.சி.பி. எந்திரம், கிட்டாச்சி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டன.

இதனால் செம்மண் கடத்தல் சில மாதங்களாக கட்டுக்குள் இருந்தது. தற்போது மீண்டும் களியக்காவிளை, மார்த்தாண்டம், பளுகல் சுற்றுவட்டார பகுதியில் இரவோடு இரவாக செம்மண் கடத்தல் அதிகம் நடந்து வருகிறது. குறிப்பாக படந்தாலுமூடு, அதங்கோடு, திருத்தோபுரம், மருதன்கோடு, வட்டவிளை, குழித்துறை ஆத்துக்கடவு, ஈத்தவிளை, பாலவிளை, மடிச்சல், திக்குறிச்சி, பேரை, ஞா றான்விளை, மேல்புறம், மலை யோரம், செம்மண் காலை, கழுவன்திட்டை, இளஞ்சிறை, ராம வர்மன்சிறை, மூவோட்டு கோணம், மலையடி, மேக்கோடு, கண்ணுமாமூடு, பளுகல், மார்த்தாண்டம், களியக்காவிளை போன்ற பகுதிகளில் இருந்து இரவு ஏராளமான செம்மண் வாகனங்களில் கடத்தப்படு கிறது.

எனவே செம்மண் கடத்தல் கும்பலை கட்டுப்ப டுத்த மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வ லர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News