உள்ளூர் செய்திகள்

மாநில அளவிலான நடன போட்டியில் வின்ஸ் பள்ளி மாணவி முதலிடம்

Published On 2023-11-20 07:49 GMT   |   Update On 2023-11-20 07:49 GMT
  • வெற்றி கேடயம் மற்றும் சான்றிதழ வழங்கப்பட்டது. நடுவர் யோகேஸ்வரி பதக்கம் அணிவித்தார்.
  • பள்ளியின் நிறுவனரும் முன்னாள் எம்.பி,யுமான நாஞ்சில் வின்சென்ட் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்தினர்.

நாகர்கோவில் :

தேசிய அளவில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாண வர்களுக்கு கல்வி அமைச்ச கத்தின் மூலம் "கலா உத்சவ் " என்ற கலைப் பண்பாட்டுத் திருவிழா மத்திய மற்றும் மாநில அரசால் நடத்த ப்பட்டு வருகிறது. இந்த கல்வி ஆண்டிற்கான நடன போட்டியான செவ்வியல்-பரதநாட்டியம் பிரிவில் நாகர்கோவில், சுங்கா ன்கடை வின்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி 9-ம் வகுப்பு மாணவி அதிதி சந்திரசேகர் கன்னியாகுமரி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார். சேல த்தில் நடைபெற்ற மாநில அளவிலான பரத நாட்டியப் போட்டியிலும் அவர் முதலிடம் பெற்றார்.

மாநில அளவில் வெற்றி பெற்ற அதிதி சந்திரசேகருக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் நடுவர்கள் பவானி. தனசுந்தரி மற்றும் ஸ்ரீமஜா ஆகியோர் முன்னிலையில் வெற்றி கேடயம் மற்றும் சான்றிதழ வழங்கப்பட்டது. நடுவர் யோகேஸ்வரி பதக்கம் அணிவித்தார்.

மாநில போட்டியில் வென்றதன் மூலம் ஜனவரி மாதம் புது டெல்லியில் நடைபெறும் தேசிய அள விலான போட்டியில் தமி ழ்நாடு பள்ளிக் கல்வித்து றை சார்பில் அதிதி சந்திர சேகர் பங்கேற்க உள்ளார்.சாதனை படைத்த மாணவி அதிதி சந்திரசேகரை பள்ளியின் நிறுவனரும் முன்னாள் எம்.பி,யுமான நாஞ்சில் வின்சென்ட் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்தினர்.

Tags:    

Similar News