உள்ளூர் செய்திகள்

போராடி கிடைத்த சுதந்திரத்தை பேணி காப்போம் என விஜய் வசந்த் எம்.பி. அறிக்கை

Published On 2022-08-14 08:31 GMT   |   Update On 2022-08-14 08:31 GMT
  • நமது உரிமைகள் பறிக்கப்படும் சூழ்நிலைகள் உருவாகும் போது அதைப் பேணி காக்க ஒன்றிணைந்து நாம் போராட வேண்டும்
  • நமது சுதந்திரத்திற்காக உயிர்த் தியாகம் உள்பட பல தியாகங்களைச் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களை இன்று நினைவு கூர்வோம்

நாகர்கோவில்:

விஜய் வசந்த் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அனைவருக்கும் எனது 75-வது சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் . 1947-ம் ஆண்டில் தாய்திருநாட்டிற்குச் சுதந்திரம் கிடைக்கப்பெற்றது . நமது சுதந்திரத்திற்காக உயிர்த் தியாகம் உள்பட பல தியாகங்களைச் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களை இன்று நினைவு கூர்வோம் .

சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட தலைவர்களையும் இந்நாளில் நன்றியுடன் நினைத்துப் பார்ப்போம் . முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா காந்தி, நரசிம்ம ராவ், மன்மோகன்சிங் போன்ற பிரதமர்கள் உலகமே உற்றுப் பார்க்கும் வகையில் இந்தியாவை வளர்ச்சியின் உச்சிக்கு எடுத்துச் சென்றனர் .

இந்தியாவின் சுதந்திரத்தைப் பேணி காக்க உயிர் கொடுத்த காந்தியடிகள், இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோரையும் இந்நாளில் போற்ற வேண்டியது நமது கடமை . இன்று நமது நாடு பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது .

இந்தியாவின் தனித்தன்மை கேள்விக்குறி ஆகி வருகிறது . சரிந்து வரும் நமது நாட்டின் புகழை மீண்டும் உச்சிக்கு எடுத்துச் செல்வதற்கு நம் அனைவரது பங்களிப்பு இன்றியமையாதது . நமக்குக் கிடைத்த சுதந்திரத்தைப் பேணி காக்க வேண்டியது குடி மக்களாகிய நமது அனைவரின் கடமை , நமது உரிமைகள் பறிக்கப்படும் சூழ்நிலைகள் உருவாகும் போது அதைப் பேணி காக்க ஒன்றிணைந்து நாம் போராட வேண்டிய தருணம் இது .

சாதி மத வேற்றுமைகள் இன்றி ஒன்றாகக் கூடி இந்த சுதந்திர தினத்தில் இந்தியாவை ஒரு வல்லரசாக மாற்றச் சபதம் ஏற்போம் . இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News