உள்ளூர் செய்திகள்

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரெயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும் விஜய் வசந்த் எம்.பி.கோரிக்கை

Published On 2023-09-15 14:59 IST   |   Update On 2023-09-15 14:59:00 IST
  • பயணம் செய்ததற்கு போதுமான ரெயில் வசதிகள் இல்லை
  • வந்தே பாரத் ரெயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும்

நாகர்கோவில் : விஜய் வசந்த் எம்.பி. தென்னக ரெயில்வே முதன்மை இயக்க மேலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீகுமாரிடம் நேரில் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ஆனால் அவர்கள் இங்கு பயணம் செய்ததற்கு போதுமான ரெயில் வசதிகள் இல்லை.மேலும் குமரியிலிருந்து சென்னைக்கு மாணவர்கள், நோய் வாய்பட்டவர்கள் மேல் சிகிச்சைக்காக அதிகம் பேர் செல்கின்றனர்.

நாகர்கோவில்-சென்னை இடையே மிக அதிகமாக பயணிகள் ரெயில் மூலம் வருவதால் அவர்களின் வசதியை கருத்தில் கொண்டு சென்னை-திருநெல்வேலி இடையே இயக்க திட்டமிடப்பட்டுள்ள 20631/20632 வந்தே பாரத் ரெயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும்.தென் தமிழக மக்கள் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் செல்வதற்கு வசதியாக ைஹதராபாத் சென்னை சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News