உள்ளூர் செய்திகள்

மார்த்தாண்டம் பகுதியில் அடிக்கடி நடைபெறும் இரு சக்கர வாகன திருட்டு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

Published On 2022-08-18 10:14 GMT   |   Update On 2022-08-18 10:14 GMT
  • இருசக்கர வாகன திருடர்கள் போலீஸ் கையில் சிக்கவில்லை
  • இரு சக்கர வாகனங்கள் திருட்டு போவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.

கன்னியாகுமரி :

மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலை மேம் பாலத்தின் அடிப்பகுதியில் பார்க்கிங் ஏரியாக்களில் வைக்கப்படுகின்ற இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வருகிறது.

சமீபகாலமாக மார்த்தாண்டம் சி. எஸ். ஐ . மருத்துவமனை சமீபம், காந்தி மைதானம், மார்க்கெட் ரோடு, வடக்குத்தெரு போன்ற பகுதிகளில் வைக்கப்படுகின்ற இருசக்கர வாகனங்கள் அவ்வப்போது திருட்டு போவது வழக்கமாகி வருகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட வர்கள் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கண்காணிப்பு காட்சிகள் மூலம் ஆய்வு செய்யப் பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர். ஆனால் இதுவரை இருசக்கர வாகன திருடர்கள் போலீஸ் கையில் சிக்கவில்லை. இந்நிலையில் மார்த்தாண்டம் காஞ்சிரகோடு, பெரும்புளியை சேர்ந்தவர் ரெஜின் (27) இவர் மார்த்தாண்டத்தில் உள்ள நகைக்கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று கடையின் முன்புறத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு வேலைக்கு சென்றவர் மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை யாரோ திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து ரஜின்மார்த்தாண்டம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து பாலத்தின் அடி பகுதி மற்றும் நிறுவனங்களின் முன்பு நிறுத்தப்படுகின்ற இரு சக்கர வாகனங்கள் திருட்டு போவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.

Tags:    

Similar News