இன்று ஆவணி 2-வது ஞாயிற்றுக்கிழமை நாகர் சிலைகளுக்கு பெண்கள் பால் ஊற்றி வழிபாடு
- ஆவணி 2-வது ஞாயிற்றுக்கிழமையை யொட்டி இன்று காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
- சாமி தரிசனத்திற்கு கோவில் நுழைவுவாயிலை விட்டு வெளியே வரை பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ஆவணி 2-வது ஞாயிற்றுக்கிழமையை யொட்டி இன்று காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நாகரா ஜருக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது.காலை முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதையடுத்து சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஏராள மானோர் குடும்பத்தோடு கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு வந்திருந்தனர். கைக்குழந்தைகளுடனும் வந்து பெண்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நாகர் சிலைகளுக்கு பெ ண்கள் மஞ்சள் பொடி,பால் ஊற்றி வழிபட்டனர். பக்தர்களுக்கு வசதியாக பால் பாக்கெட்டுகள் மற்றும் மஞ்சள் பாக் கெட்டுகள் கோவில் வளாகத்துக்குள்ளும் கோவில் உள்புறத்திலும் விற்பனை செய்யப்பட்டது.
சாமி தரிசனத்திற்கு குமரி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர் கள் வருகை தந்திருந்தனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் தலையாகவே காட்சி அளித்தது. சாமி தரிசனத்திற்கு கோவில் நுழைவுவாயிலை விட்டு வெளியே வரை பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு வசதியாக குடிதண்ணீர் வசதி உட்பட அடிப்படை வசதிகளும் அங்கு செய்யப்பட்டிருந்தது.போலீசார் மப்டி உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கோவிலுக்குள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நுழைய அனுமதி வழங்கப்படாததையடுத்து நாகராஜா திடலில் பக்தர்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு சாமி தரிசனத்திற்கு சென்றனர்.