உள்ளூர் செய்திகள்

கீழ்குளம் அருகே மழைக்கு சேதமடைந்த வீட்டில் இருந்தவர்கள் ஜே.சி.பி. மூலம் மீட்பு

Published On 2023-10-16 12:15 IST   |   Update On 2023-10-16 12:15:00 IST
  • வீட்டை சுற்றி குளத்து நீர் சூழ்ந்து வீட்டில் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர்.
  • மழைநீர் வெளியேற்றப்பட்டு மழைநீரால் சூழப்பட்ட வீட்டினுள் இருந்தவர்கள் மீட்கப்பட்டனர்.

கருங்கல் :

கீழ்குளம் அருகே குஞ்சாகோடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையின் காரணமாக அரையாக்குழி விளை புளியடி குளம், பக்க சுவர் இடிந்து விழுந்தது. இதில் அப்பகுதியில் வசித்து வரும் வேணு என்பவர் வீடு மதில் சுவர் மற்றும் வீட்டின் தலைவாசல் படிக்கட்டு வரை இடிந்து விழுந்து சேதமடைந்தது. வீட்டை சுற்றி குளத்து நீர் சூழ்ந்து வீட்டில் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து கீழ்குளம் பேரூராட்சி தலைவர் சரளா கோபால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜே.சி.பி.யை வரவழைத்து குளத்தில் இருந்த மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டார். தொடர்ந்து மழைநீர் வெளியேற்றப்பட்டு மழைநீரால் சூழப்பட்ட வீட்டினுள் இருந்தவர்கள் மீட்கப்பட்டனர். இதன்மூலம் அந்த வீடும் பாதுகாக்கப்பட்டது.

அப்போது கிள்ளியூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் கோபால், பேரூராட்சி செயல் அலுவலர் ரெகுநாதன், பேரூராட்சி உறுப்பினர் ஜாஸ்மின், லிபின்தாஸ், விக்னேஷ், ஜோஸ், அபிலாஷ், கிறிஸ்டோபர், சிங் உட்பட பலர் உடனிருந்தனர். இவர்களுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News