உள்ளூர் செய்திகள்

ஆத்திவிளை ஊராட்சியில் சுகாதார சீர்கேடுகள் காரணமாக டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்

Published On 2022-09-17 07:52 GMT   |   Update On 2022-09-17 07:52 GMT
  • சீரமைப்பு பணி செய்ய பொது மக்கள் கோரிக்கை
  • கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உருவாகி உள்ளன.

கன்னியாகுமரி:

தக்கலை ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் உள்ள ஆத்திவிளை ஊராட்சி பகுதியில் பல்வேறு பகுதிகளிலும் சுகாதார சீர்கேடுகள் நிலவுகின்றன.

திங்கள் நகர் ரவுண்டானா அருகே சேவியர் தெருவில் இருந்து தபால் அலுவலகம் செல்லும் வழியில் உள்ள கழிவுநீர் ஓடை அடைபட்ட நிலையில் இருந்து வந்ததால் சீரமைப்பு பணிகள் நடந்தன. ஆனால் இரணியல் போலீஸ் நிலைய நுழைவு வாயிலில் வழியில் ஓடை அடைபட்ட நிலையில் உள்ள தால் அப்பகுதியில் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உருவாகி உள்ளன.

இரணியல் போலீஸ் நிலையம், நீதிமன்றம், அரசு வங்கி, தபால் அலுவலகம், தனியார் மருத்துவமனை கள், ஆட்டோ நிறுத்தம், தேநீர் கடைகள், ஓட்டல்கள் உள்ள இப்பகுதியில் சாக்கடை கழிவு நீர் தேங்கிய நிலையில் உள்ளது. இது டெங்கு காய்ச்சல் அபாயத்தை ஏற்படுத்துவதாக பொது மக்கள் அஞ்சுகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News