உள்ளூர் செய்திகள்

குழித்துறை-களியக்காவிளை வரையிலான பழுதடைந்த தேசிய நெடுஞ்சாலையை முறையாக சீரமைக்கவில்லை

Published On 2022-09-03 09:54 GMT   |   Update On 2022-09-03 09:54 GMT
  • வாக்குவாதத்தில் ஈடுபட்ட நகர்மன்றத் தலைவர் பொன். ஆசை தம்பி
  • தரமாக சீரமைக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தல்

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையிலான தேசிய நெடுஞ்சாலையை தற்காலிகமாக செப்பனிட ரூ. 14.99 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து இதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

இந்த நிலையில் குழித் துறை முதல் களியக்காவிளை வரையிலான பகுதிகளில் சாலை அமைக்காமல் சேதமடைந்த பகுதிகளை மட்டும் சீரமைக்கபடுவதற்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இதனை கண்டித்து அவர்கள் திடீரென அதிகாரி கள் மற்றும் ஒப்பந்ததாரரை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபர ப்பும் பதட்டமும் நிலவி யது. இதனையடுத்து சாலை போடும் பணி நிறுத்த ப்பட்டது.

இந்நிலையில் திடீரென பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர்களுடன் அங்கு வந்த குழித்துறை நகர்மன்றத் தலைவர்பொன். ஆசைத் தம்பி, நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தேசிய நெடுஞ் சாலை பணி தொடங்கிய நிலையில் தனக்கு தகவல் தரவில்லை என்றும் சேதமடைந்த பகுதியை மட்டும் சரி செய்து விட்டு செல்ல அனுமதிக்க மாட்டேன் என கூறியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சாலை செப்பனிடும் பணியை தடுத்து அதிகாரிகளிடம் அவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும் முறையாக தரமாக சாலை போட வேண்டுமென்றும், சாலை முறையாக உடைத்து சீரமைக்க வேண்டும் என்றும், மேலோட்டமாக சாலையை செப்பனிட கூடாது எனவும், இரவு நேரங்களில் சாலை போட கூடாது எனவும் அவர் கூறினார்.

இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.இதையடுத்து அதிகாரிகள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி தரமான முறையில் சாலை செப்பனிடவும், சேதமடைந்த பகுதிகள் சீரமைப்பு முடிந்தவுடன் அனைத்து பகுதிகளும் முறையாக சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தனர்.

இதையடுத்து நகர்மன்றத் தலைவர்பொன். ஆசைத் தம்பி போராட்டத்தை கை விட்டார்.இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, தற்போது எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்த த்தின் அடிப்படையில் சேதமடைந்த பகுதிகளை மட்டும் சீரமைத்து வரு கிறோம்.

அடுத்து உடனடியாக நிரந்தரமாக சீரமைக்க நட வடிக்கை மேற்கொள்ள ப்படும் என்றனர். ஆனால் பொதுமக்கள் இதில் சமாதானம் அடையாமல் தேசிய நெடுஞ்சாலை மற்றும் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால்சிங், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திவாகர் ஆகியோ ரும் போராட்டத்தில் கலந்துகொண்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், நகர்மன்ற துணைத் தலைவர் பிரவீன் ராஜா மற்றும் கவுன்சிலர்களும் சாலையை பார்வையிட்டு தரமாக சீரமைக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.

Tags:    

Similar News