உள்ளூர் செய்திகள்

புத்தன் அணை பகுதியில் ரப்பர் மரங்களை பராமரிப்பவருக்கு பலன் கிடைக்க நடவடிக்கை

Published On 2022-06-07 09:51 GMT   |   Update On 2022-06-07 09:51 GMT
  • எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
  • விவசாயிகள் மன வேதனை

நாகர்கோவில்:

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

குமரி மாவட்டத்தில் புத்தன் அணை, பத்மநாப புரம் கால்வாய் கரை யோரங்களில் ஆயிரக்க ணக்கான ரப்பர் மரங்கள் தனி நபர்களால் நட்டு பராமரித்து வளர்க்க ப்படுகிறது. அந்த மரங்கள் பலன் தரும் காலங்களில் அதில் பால் வெட்ட குத்தகைக்கு அரசு விடுகிறது.

அப்போது சம்பந்தமே இல்லாமல் லாப நோக்கில் வெளியூர்களை சேர்ந்த வர்கள் குத்தகைக்கு எடுத்து பலன் அனுபவித்து வருகின்றனர்.

இதனால் மரத்தை நட்டு, வளர்த்து, பராமரித்து வந்த அந்த பகுதி விவசாயிகள் மன வேதனைவிவசாயிகள் மன வேதனை அடைகிறார்கள். ஆகவே தாங்கள் நடவடிக்கை எடுத்து மரங்களை நட்டு, பராமரிப்ப வர்களுக்கே பலன் கிடைக்க, அரசு கட்டணம் நிர்ணயித்து கொடுக்க வேண்டும். இதனால் மரங்களை நன்றாக பராமரிப்பதுடன் அவர்கள் மனம் ஆறுதலடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News