உள்ளூர் செய்திகள்

தோட்டக்கலைத்துறையில் விவசாயிகளுக்கு மானியத்தில் இடுபொருள், கருவிகள்

Published On 2022-06-25 13:25 IST   |   Update On 2022-06-25 13:25:00 IST
  • விவசாயிகளுக்கு உழவர் சந்தைக்கான அடையாள அட்டை
  • கலெக்டர் அரவிந்த் செய்தி குறிப்பில் தகவல்

நாகர்கோவில்:

குமரி மாவட்ட கலெக் அரவிந்த விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

கன்னியாகுமரி மாவட் டத்திற்கு தோட்டக்கலை துறையின் கீழ் 2022-23ம் ஆண்டு மாநில தோட்டக் கலை வளர்ச்சித் திட்டத் தின் கீழ் ரூ.60 லட்சத்து 87 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது. அரசு மாணவியர் விடுதிகளில் தோட்டம் அமைத்தல் இனத்தின் கீழ் 8 எண்ணத் திற்கு ரூ.64,000 நிதி ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசு மாணவியர் விடுதி ஒன்றிற்கு 100 சதவீதம் மானியத்தில் ரூ.8,000 மதிப்பிலான பழச் செடிகள். மூலிகை செடிகள், தென்னங்கன்றுகள், காய் கறி விதைகள், தோட்டக் கருவிகள் உள்ளிட்ட இதர இடுபொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும்.

ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் அரசு மாணவியர் விடுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

உயர் விளைச்சல் துல்லிய பண்ணையத் திட்டத்தின் கீழ் 48 ஹெக்டேருக்கு ரூ 7 லட்சத்து 20 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் துல்லிய பண்ணையம் செயல்படுத்தப்பட உள்ளது. நுண்ணீர் பாசன வசதியை பெற்றுள்ள விவசாயிகள் மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெற இயலும்.

ஒரு ஹெக்டேருக்கு ரூ.15.000 மதிப்பிலான இடுபொருட்கள் வழங் கப்படும். கூடுதல் வருமானம் ஈட்டும் சிறு தொழில் இனத்தின் கீழ் எண்ணத்திற்கு ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் காளான் வளர்ப்பு கூடம் அமைத்திட 50 சதவீதம் மானியமாக ரூ.50,000 வழங்கப்படும்.

உழவர் சந்தையில் காய்கறி வரத்தை அதிகரிப்பதற்கான சிறப்பு திட்டத் தின் கீழ் 70 ஹெக்டேருக்கு ரூ.14 லட்சம் நிதி ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது. உழவர் சந்தையை சுற்றியுள்ள கிராமங்களில் காய்கறிகள் சாகுபடி செய்ய ஊக்குவிக்கப்படும். ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 மதிப்பிலான இடுபொருட்கள் வழங் கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகளுக்கு உழவர் சந்தைக்கான அடையாள அட்டை வழங்கப்படும்.

ஊடுபயிர் சாகுபடி இனத்தின் கீழ் தென்னையில் ஊடுபயிராக வாழை பயிரிடும் விவ சாயிகளுக்கு 70 ஹெக்டே ருக்கு ரூ.18 லட்சத்து 35 ஆயிரம் நிதி ஒதுக்கீடுசெய் யப்பட்டுள்ளது. இதில் பய னாளிக்கு முதலாண்டிற்கு மானியத் தொகையாக ஒரு ஹெக்டேருக்கு ரூ.26.250 மதிப்பிலான இடுபொ ருட்கள் வழங்கப்படும்.

வாழையில் ஊடுபயிராக காய்கறிகள் பயிரிடும் விவ சாயிகளுக்கு 100 ஹெக்டே ருக்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பயனாளிக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலான் இடுபொருட்கள் வழங்கப்படும்.

தோட்டக்கலை கரு விகள் மற்றும் உபகரணங் கள் விநியோகம் இனத்தின் கீழ் நெகிழி கூடைகள் 10 எண்ணத்திற்கு ரூ.37,500 அலுமினிய ஏணிகள் 40 எண்ணத்திற்கு ரூ.4 லட் சம். பழங்கள் அறுவடை செய்ய பயன்படுத்தும் வலைக் கருவி 30 எண்ணத்திற்கு ரூ.7,500, மலர் அறுவடைக்கான முகப்பு விளக்கு 50 எண்ணத்திற்கு ரூ.12,500, கவாத்து கத்திரி 100 எண்ணத்திற்கு ரூ.20,000 நாப்ஸாக் தெளிப்பான் (8-12 லிட்டர்) 15 எண்ணத்திற்கு ரூ.57,000 போன்ற அலகுக்கு 50 சதவீதம் மானியத்தில் ஒரு பயனாளிக்கு வழங்கப்படும்.

இத்திட்டங்களை பற்றி மேலும் தகவலறிய விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார உதவி தோட்டக்கலை அலுவலகங்களை அணுகி பயன் பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News